உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளிவராதிருக்கும் நிலையில் அது தொடர்பில் செய்திகளை பரப்பி மக்களை குழப்பாதீர்கள் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு, அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்காக இன்னும் அது தொடர்பான தகவல்கள் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்த தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், இவ்வாறாக செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்று அரச தகவல் திணைக்களத்தை கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் திட்டமிட்டவாறு தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆயத்தங்களை முன்னெடுத்து வருவதாகவும் அதன்படி அந்தத் தேர்தல் குறித்த தினத்தில் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு தரப்பினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், இது தொடர்பில் அவதானம் செலுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஆணைக்குழுவின் தலைவர் கடிதமொன்றை அனுப்பி ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளார்.