9 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி புதிய கூட்டத் தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு பின்னரான திகதியொன்றில் ஜனாதிபதியின் சிம்மாசன உரையுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அன்றைய தினத்தில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவித்தல்களை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.