November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலமைப் பரிசிலுக்கு தகுதியுடையோரின் எண்ணிக்கை!

2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் புதன்கிழமை இரவு வெளியாகின.

இதன்படி www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு 334,805 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததுடன் அவர்களில் 329,668 பேர் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

இந்தப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் வெட்டுப்புள்ளிகளுக்கும் மேல் புள்ளிகளை பெற்றவர்கள் புலமைப் பரிசில் உதவித் தொகையை பெற்றுக்கொள்வதற்கும், பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கும் தகுதியுடைவர்களாகுவர்.

இதன்படி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் உதவித்தொகை வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 20,000 ஆகும். இதில் 250 புலமைப்பரிசில்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்கள் தனது மதிப்பெண்களை மீள் பரிசீலனை செய்ய விரும்பினால், பெப்ரவரி 28 ஆம் திகதி வரை அதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.