முஜிபூர் ரஹ்மான் பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற ஆசனத்திற்கு ஏ.எச்.எம்.பௌசியின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதால் எம்.பி பதவியை கடந்த வாரம் முஜிபூர் ரஹ்மான் இராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து அந்த எம்.பி ஆசனத்திற்கு பௌசியில் பெயரை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பௌசி 48,701 வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.