உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபா வரையிலுமே செலவிட முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவீன கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளுக்கு அமைய வேட்பாளர் ஒருவர் துண்டுப் பிரசுரம் உள்ளிட்டவற்றுக்காக வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாவை மட்டுமே செலவிட முடியுமென்று இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தற்போது நடைபெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு பாதிப்பில்லாதவாறு முன்னெடுக்குமாறும் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.