அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண திருத்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மின்சாரக் கட்டண திருத்தத்தின் ஏனைய விடயங்கள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானமானது தமது ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டணத்தை 65 முதல் 70 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அண்மையில் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.