February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அதிகரிக்கும் வேலையற்றோர் எண்ணிக்கை!

File Photo

இலங்கையில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் நாடு முழுவதும் 450,000 வேலையற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடி நிலைமையே அதிகளவில் வேலையற்றோர் உருவாக காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியால் பலரை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.

இந்நிலையில் வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் புதிய திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருவதாக மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.