தினசரி அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு நேரத்தை குறைப்பதற்கு இலங்கை மின்சார சபைத் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஜனவரி 24 ஆம் திகதி முதல் 2 மணி நேர மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய தினவரி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு பகல் வேளையில் 40 நிமிடங்கள் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், குறித்த பிரதேசங்களில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினால் கடந்த 10 மாதங்களாக தினசரி மின் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக தினசரி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் ததற்போது 2 மணித்தியாலங்கள் மாத்திரம் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.