November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்விச் சுற்றுலா தொடர்பில் புதிய ஒழுங்கு விதிகள்?

பாடசாலை கல்விச் சுற்றுலா தொடர்பான ஒழுங்குவிதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.

இதன்படி, கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்கள் இரவாவதற்கு முன்னர் வீடு திரும்பக் கூடியவாறு சுற்றுலா செல்லும் தூர அளவை நிர்ணயம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அதிகாரிகள் சில யோசனைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி சுற்றுலா செல்லும் மாணவர்கள் நாளொன்றுக்கு 100 கிலோ மீற்றர் அல்லது அதிலும் குறைவான தூரத்திற்கு பயணிக்கக் கூடியாவாறு புதிய ஒழுங்குவிதிகளை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலா செல்லும் போது மாலை 6.30 மணிக்குள் பஸ்கள் பாடசாலைக்கு திரும்பும் வகையிலும், தூர இடங்களுக்கு செல்லும் போது குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்குமிடத்திற்கு செல்லும் வகையிலும் கல்வி சுற்றுலா ஒழுங்குவிதிகள் திருத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அண்மையில் கொழும்பு பாடசாலையொன்றில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த மாணவர்கள் இரவு நேரத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது

அவர்கள் பயணித்த பஸ் விபத்துக்கு உள்ளாகியது.
இந்த சம்பத்தை தொடர்ந்து கல்வி அமைச்சின் அதிகாரிகள் சுற்றுலா தொடர்பில் புதிய ஒழுங்கு விதிகளை விதிப்பதற்கு ஆராய்ந்துள்ளனர்.