உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கமைய 10 கோடி ரூபா நஷ்ட ஈட்டை என்னால் செலுத்த முடியாத நிலைமையே காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அந்தளவு பணத்தை தேடுவதற்கு தன்னிடம் பொருளாதார பலம் இல்லையெனவும், மக்களிடம் இருந்து பணத்தை சேர்ப்பதற்கே தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு பணத்தை செலுத்த முடியாது போகுமாக இருந்தால் சிறைக்கு போவதை தவிர வேறு வழியில்லை என்று நிகழ்வொன்றில் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இதேவேளை டட்லி சிறிசேன தனது சகோதரனாக இருந்தாலும் அவரின் வர்த்தகத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன, மாந்தோட்டம் ஒன்று மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும், இதனை தவிர வேறு வருமான வழிகள் இல்லையென்றும் கூறியுள்ளார்.