File Photo
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 13 ஆம் அரசிலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் காணி விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது மிக முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரை ஜனாதிபதி சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.