May 4, 2025 1:33:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் யாழ். மாநகர மேயரானார் ஆர்னோல்ட்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் மீண்டும் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

மேயராக பதவி வகித்த வி. மணிவண்ணன் பதவி விலகியதை தொடர்ந்து புதிய மேயரை தெரிவு செய்வதற்காக கடந்த 19 ஆம் திகதி கூட்டம் நடைபெற்றது.

எனினும் அன்றைய தினம் உறுப்பினர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாமையினால் மேயர் தெரிவு இடம்பெறாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், உள்ளூர் அதிகார சபைகள் மற்றும் தேர்தல்கள் கட்டளை சட்டத்தின் படி யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பை அடுத்தே அவர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.