
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான தினத்தை அறிவித்துள்ளது.
இதன்படி நாடு முழுவதுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 339 சபைகளுக்கான தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த மற்றைய 340 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 18 ஆம் திகதி முதல் இன்று நண்பகல் 12 மணி வரையில் முன்னெடுக்கப்பட்டதுடன், கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை 4ஆம் திகதி முதல் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை இடம்பெற்றது.
இதேவேளை கல்முனை நகர சபை தொடர்பான வழக்குத் தாக்கலொன்று காரணமாக அந்த நகர சபைக்கான வேட்புமனுத் தாக்கல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.