ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடயங்களுடன், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அதற்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கப்பெற்றது.