பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும், இதனாலேயே தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் முஜிபுர் ரஹ்மான் போட்டியிட தீர்மானித்துள்ளார்.