13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய பொங்கல் விழாவில் 13ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து குறித்து பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே சரத் வீரசேகர இவ்வாறு கூறியுள்ளார்.
13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவரும் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கின்றன என்று அதன்போது வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்தத் திருத்தம் இந்தியாவின் தேவைக்காக எம்மீது சுமத்தப்பட்ட ஒன்றாகும். இதனை ஒருபோதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது நாட்டை 9 துண்டுகளாக பிரித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.