June 13, 2025 12:34:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பட்டத் திருவிழா: ராட்சத பட்டங்களின் வண்ணக்கோலம்!

தைப்பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் யாழ். பட்டத் திருவிழா இம்முறை சிறப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்று மாலை இந்த பட்டத் திருவிழா நடைபெற்றது.

இதன்போது போட்டியாளர்களினால் ராட்சத பட்டங்கள் பலவிதமான வண்ணங்களில் பறக்கவிடப்பட்டது.

இதில் முதலாம் இடத்தை உருமாறும் மர்ம தாக்குதல் விமானத்தை போன்று பட்டத்தை அமைத்த ம.ஹாசன் என்பவர் பெற்றுக்கொண்டார். இவருக்கு இரண்டு பவுண் தங்க ஆபரணமும் பரிசாக வழங்கப்பட்டது. இவர் 6 ஆவது தடவையாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை இரண்டாம் இடத்தை உழவு இயந்திரம் மரநடுகை திட்டத்தை போன்று பட்டத்தை அமைத்த ம. பிரசாந்தும் மூன்றாம் இடத்தை மேள தாளங்களுடன் கூடிய ஆகாய விசித்திர போர்கல அரங்கம் போன்று பட்டத்தை அமைத்த நிரோசன் சின்னாவும் பெற்றுகொண்டனர்.