March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனவரி 16 பாடசாலைகளுக்கு விடுமுறையா?: கல்வி அமைச்சின் பதில்!

தைப் பொங்கலுக்கு மறுநாள் 16 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் வழமைப் போன்று இயங்கும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் அதற்கு மறுநாள் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் ஆராயப்படுவதாக முன்னர் கூறப்பட்டிருந்தது.

எனினும் 16 ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை தினமாக மாத்திரமே இருக்கும் என்றும், அரச, தனியார் நிறுவனங்கள் வழமைப் போன்று இயங்கும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாடசாலைகளும் வழமைப் போன்று இயங்கும் என்றும் மூன்றாம் தவணை விடுமுறை 3 கட்டங்களாக வழங்கப்பட்டுவருவதை கருத்திற்கொண்டு, 16 ஆம் திகதிக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.