May 4, 2025 1:43:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி யாழ். வருகை: எதிர்ப்பு போராட்டத்தால் பதற்றம்!

தைப்பெங்கல் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை கொழும்பில் இருந்து விசேட விமான மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

இதன்போது ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வேளையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து, பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விரட்ட முயற்சித்தனர்.

எனினும் தொடர்ந்தும் அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

தற்போது நல்லூர் அரசடி சந்தி பகுதியில் இராணுவம், கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.