ஜனவரி 23 ஆம் திகதி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை அதிகாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சை பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்று தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.