இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்காக கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று தேர்தல் நடத்தப்பட்டது.
அதில் போட்டியிட்ட ஸ்ரீ ரங்கா 27 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜகத் ரோஹன 24 வாக்குகளைப் பெற்றார்.
இந்த தேர்தலில் பங்கேற்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமார் வருகை தந்த போதிலும், அவரால் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.