உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட தீர்மானித்ததை தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள் சில வேறு கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைத்துள்ளன.
இதன்படி ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்த புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் குறித்த கட்சிகள் இன்று கையெழுத்திட்டுள்ளன.
அதன்படி எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்ககப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர்.
சின்னம் தொடர்பாக ஏற்பட்ட இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இதில் இணையவில்லை.