க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் நாடெங்கிலும் 2,200பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது.
23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரையில் பரீட்சை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சையுடன் தொடர்புடை கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட நடவடிக்களுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுப் பரீட்சைகள் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கமையவே இந்த தடை விதிக்கப்படவுள்ளது.
இதன்படி இந்த தடையை மீறி இந்த காலப்பகுதியில் இந்த பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் , கலந்துரையாடல்கள் , மாதிரி வினாத்தாள் விநியோகங்கள் , ஒன்று கூடல்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.