March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரெஜினோல்ட் குரே காலமானார்!

முன்னாள் அமைச்சரும் வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே காலமானார்.

வியாழக்கிழமை இரவு திடீர் சுகயீனமடைந்த நிலையில் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

74 வயதான ரெஜினோல்ட் குரே, கடந்த அரசாங்கங்களின் போது வெகுஜன ஊடக அமைச்சர், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர், விமான போக்குவரத்து அமைச்சர், நீதி பிரதி அமைச்சர், மேல் மாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் தலைவர் மற்றும் அரசால் நடத்தப்படும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளார்.