
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்ற நிலையில், பரீட்சைக்கு நாடு முழுவதும் 334,698 மாணவர்கள் தோற்றியிருந்தனர்
இந்த பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் பெறுபேற்றை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.