நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தனித்து போட்டியிட இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.