எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் கூட்டணியாக போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது இரண்டு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி சில மாவட்டங்களில் யானை சின்னத்திலும், சில மாவட்டங்களில் தாமரை மொட்டு சின்னத்திலும் போட்டியிடுவதற்கு இரண்டு கட்சிகளும் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.