இந்த வருடத்தில் அரச வருமானம் குறைவடையும் என்றும், இதனால் திறைசேரி பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்படலாம் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று சமுர்த்தி கொடுப்பனவை வழங்குவதில் இரண்டு வாரங்கள் தாமதம் ஏற்படலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இதற்கு தீர்வாக, அனைத்து அமைச்சுக்களுக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை 5 வீதத்தால் குறைத்து நிலைமையை சீர் செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.