
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனை இன்று நடைபெற்ற அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது நேரடியாக மின் கட்டணத்தை அதிகரிக்காது, உற்பத்தி செலவுகளை அடிப்படையாக கொண்ட விலை சூத்திரத்தை பயன்படுத்தி கட்டண திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விலை சூத்திரம் தொடர்பான பரிந்துரையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி, அதன் யோசனையை பெற்று அதன்படி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.