June 16, 2025 23:43:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸ் கட்டண குறைப்பு தொடர்பில் பஸ் சங்கத்தின் தீர்மானம்!

எந்த நிலையிலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

இதன்படி இன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது தங்களால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என்பதனை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன கூறுகையில், தற்போது வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் 500 வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில் பஸ் கட்டணத்தை எங்களால் குறைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.