
மொனராகலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசிர குமார கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கமைய குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டை சோதனையிட்ட போது, காயவைப்பதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 350 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கைதாகியுள்ள பொலிஸ் அதிகாரி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.