தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால் இனப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பான சர்வக்கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேசத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியுடைய செயற்பட்டாளர்களுக்கான விசேட கூட்டம் நேற்று நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு பற்றி பேசுவது தப்பில்லை. ஆனால் மலையகத்தை மறந்து விடக்கூடாது. வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துகின்றீர்கள். தேசிய இனப்பிரச்சினையானது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. எங்களிடமும் பேசுங்கள் என்று நாங்கள் ஜனாதிபதியைய கேட்டுக்கொண்டுள்ளோம் என்று மனோ கணேசன் அதன்போது கூறியுள்ளார்.
இதன்படி மலையக கட்சிகளை அழைத்து ஜனாதிபதி பேச்சு நடத்தாவிட்டால், சர்வக்கட்சி கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது. எங்களை மதித்தால்தான் நாமும் மதிப்போம் என்று தெரிவித்துள்ளார்.