
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் தினம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனவரி 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பின்னர் வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தலை நடத்தும் தினம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.