
பெப்ரவரி 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் அனைத்து வகையான மதுபான விலைகளும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி 750 மில்லி லீட்டர் அதிவிசேட சாராய போத்தலின் விலை 206 ரூவினாலும், வெளிநாட்டு சாராய போத்தலின் விலை 266 ரூபாவினாலும் பியர் விலை 39 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட வரிகளை விதிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள காரணத்தினாலேயே இதன் விலைவகள் அதிகரிக்கப்படவுள்ளன.
இதேவேளை சிகரெட் விலையும் 15 ரூபாவினால் அதிகரிக்கட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.