
அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த கொடுப்பனவை ஜனவரி 2 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
இந்த விசேட முற்கொடுப்பனவு செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கை பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
2023 பெப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர், இந்த கொடுப்பனவை செலுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்பதுடன், 2023 ஆம் ஆண்டுக்குள் உரிய தொகை மீள அறவிடப்பட வேண்டும் என்றும் இச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.