
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக தொடர்ந்தும் முயற்சித்து வருகிறார்.
இதற்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 ஜனாதிபதி தேர்தலின் போது தன்னால் இரத்துச் செய்யப்பட்டிருந்த குடியுரிமையை மீளப் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி சில மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்திருந்தார்.
எனினும் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் அவர் தற்போது துபாய் சென்றுள்ளதுடன், அங்கிருந்து அமெரிக்க குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜூலை மாதம் இலங்கையில் இருந்து வெளியேறி பின்னர் 2 மாதங்களில் மீண்டும் நாட்டிற்கு வந்திருந்ததுடன், பின்னர் கடந்த கடந்த டிசம்பர் மாதத்தில் அவர் துபாய் சென்று தற்காலிகமாக தங்கியுள்ளார்.