
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் விலை 15 ரூபாவாலும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் டீசல் விலை குறைவடைந்துள்ளதால் பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலைமையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள கெமுனு விஜேரத்ன, தற்போதைக்கு பஸ் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமாயின் டீசலின் விலை 4 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.