
சட்டவிரோதமான முறையில் சுற்றுலா வீசாவில் பணியாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்ற பெண்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறாக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் பெண்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் உள்ள விடுதியில் தங்கியுள்ள இலங்கைப் பெண்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.