
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன், கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள டேவிட் கெமரன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கெமரன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.