January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.

தனது பதவி விலகல் தொடர்பில் யாழ். மாநகர மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மணிவண்ணன் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இதன்படி டிசம்பர் 31 ஆம் திகதி முதல் யாழ். மாநகர முதல்வர் பதவியில் இருந்து மணிவண்ணன் விலகவுள்ளார்.

மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் அண்மையில் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு உள்ள போதும், அதற்கு முன்னர் பதவி விலக முதல்வர் தீர்மானித்துள்ளார்.