
இலங்கையில் டிசம்பர் 31ஆம் திகதியுடன் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.
அரச ஊழியர்களின் கட்டாய ஒய்வு வயதெல்லையை 60 ஆக அறிவித்து அண்மையில் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் நாளை 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
ஒரே தடவையில் இந்தளவு பெருமளவிலான அரச ஊழியர் ஓய்வு பெற்று செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
எனினும் அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதில் இது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இவ்வாறாக ஓய்வு பெற்று சென்ற பின்னர் ஏற்படக் கூடிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.