தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையால் இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை சமூகத்திலுள்ள அனைவரையும் பாதித்துள்ளதாகவும் இதனால் நாட்டின் மொத்த சனத் தொகையில் 26 வீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையில் 22 சதவீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மொத்த சனத் தொகையில் 11 வீதமான குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள செஞ்சிலுவை சங்கம், வருமான மட்டம் 62 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.