
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று யாழ்ப்பாண கோட்டையை பார்வையிட்டுள்ளனர்.
இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்றிருந்தனர்.
இதன்போது அவர்கள், கோட்டைக்கு சென்று அது தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.
குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கோட்டைக்கு பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ அவ்விடத்திற்கு சென்றிருக்கவில்லை.