
வீதி ஒழுங்குவிதிகளை மீறி தவறிழைக்கும் வாகன சாரதிகளுக்கு புள்ளி முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சாரதிகளின் இழைக்கும் ஒவ்வொரு தவறுக்கும் புதிய முறைமையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட அளவுக்கு மேல் புள்ளிகள் வரும் போது அவர்களுக்கு அபராதம், தண்டனை ஆகியவற்றை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அடிப்படை முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதி பெற்றுகொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் கூறியுள்ளார்.