உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் தொடர்பான அறிவித்தலை வெளியிடுவதற்கு தயாராகி வருவதாகவும், இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அந்த அறிவித்தலை வெளியிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் வேட்பு மனுக்களை ஏற்கும் தினம் தொடர்பிலும், பின்னர் தேர்தல் நடைபெறும் தினம் குறித்தும் அறிவிக்கப்படவுள்ளது.
இதனிடையே எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னதாக தேர்தல் குறித்து அறிவிக்கப்படாத விடத்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் கண்காணிப்பு இயக்கமான பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.