இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே எரிக் சொல்ஹெய்ம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதியினால் தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் போது மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இருக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் சில வலியுறுத்தியுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு கூறியுள்ளார்.
இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை என எரிக் ஹொல்ஹெய்ம் தெரிவித்தள்ளார்.
உள்ளக ரீதியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.