இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளிக்கிழமை மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை திங்கட்கிழமை மீளத் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனையின் பின்னர் வெள்ளிக்கிழமை அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இன்று காலை வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை தொடர்ந்து, காலநிலை சீரடைந்து வருவதால் நாளைய தினத்தில் பாடசாலைகளை மீளத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.