November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பல பிரதேசங்களில் வளி மாசடைவு!

தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல நகரங்களில் வளி மாசடைவு ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் வளி மாசுபாடு முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் வளி மாசுபாடு முகாமைத்துவ பிரிவின் தலைமை ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தற்போது நிலவும் கடும் காற்றுடன் கூடிய காலநிலையால், இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என கூறப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 புள்ளிகளாக காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்த காலப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியே வருவோரை முகக் கவசத்தை அணியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.