வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட் கட்டுப்பாடுகள் சில இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி வெளிநாடுகளில் இருந்து வருவோர் தமக்கு கொவிட் இல்லை என்பதனை உறுதிப்படுத்துவதற்கான பிசிஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியைப் பெற்றதற்கான சான்றிதழ் கட்டாயமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய கொவிட் தொற்று நிலைமையை தொடர்ந்து 2020 மார்ச் முதல் இலங்கையில் கொவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.