ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு 8 ஆம் திகதி நடக்கவுள்ளதுடன், அதனை தொடர்ந்து அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி இந்த வார இறுதியில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சிலர் ஆளும் தரப்புக்கு தாவவுள்ளதாகவும், இதனை தொடர்ந்து அமைச்சரவை மறுசீரமைப்பு நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய எதிர்க்கட்சியில் இருந்து ராஜித சேனாரத்ன, குமார வெல்கம ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆகிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை தற்போதைய அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு வேறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.